ADDED : ஆக 03, 2026 04:30 PM
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.28.69 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள், கருணை பணி ஆணைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். இதில் 462 மனுக்கள் பெறப்பட்டன.
பல்வேறு விபத்துக்களில் தாய், தந்தை இருவரில் எவரேனும் ஒருவரை இழந்த 35 மாணவர்களுக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.26.25 லட்சம் மதிப்பு வைப்பு பத்திரங்களையும், சத்துணவு திட்டத்தில் பணிபுரிந்து பணியின் போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு இருவருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி ஆணை, ஒருவருக்கு சமையாலளர் பணி ஆணை, இருவருக்கு சமையல் உதவியாளர் பணி ஆணை என 5 பேருக்கு கருணை பணி ஆணை வழங்கப்பட்டது. 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.44 லட்சத்திற்கு நவீன செயற்கை கால்களை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஆனந்தி, துணை கலெக்டர் மோகனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
