/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சின்னவள்ளிக்குளம்-குமாரபுரம் ரோட்டில் ஜல்லி பரப்பியதுடன் நிற்கும் பணி

ADDED : மே 28, 2024 05:36 AM

விருதுநகர் : விருதுநகர் அருகே சின்னவள்ளிக்குளம் -- குமாரபுரம் செல்லும் ரோட்டில் புதிய ரோடு அமைப்பதற்காக ஜல்லி பரப்பி மாதக்கணக்காகியும் ரோடு அமைக்காததால் வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சின்னவள்ளிக்குளம் முதல் குமாரபுரம் செல்லும் ரோடு சேதமானதால் வாகனங்களில் செல்வோர் சிரமத்தை சந்தித்தனர். இதனால் லோக்சபா தேர்தலுக்கு முன்பே புதிய ரோடு அமைப்பதற்காக ஜல்லி கற்கள் பரப்பும் பணிகள் நடந்தது. ஆனால் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், டூவீலரில் வேலைக்கு சென்று வருபவர்கள் தொடர்ந்து வாகனங்களில் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். ஜல்லி கற்கள் பரப்பிய ரோட்டில் சென்று வருவதால் வாகனங்களில் அடிக்கடி பழுதும் ஏற்படுகிறது.
எனவே ஜல்லி பரப்பியதோடு நிற்கும் சின்னவள்ளிக்குளம் முதல் குமாரபுரம் ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.