/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி
/
இடிந்து விழும் நிலையில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி
இடிந்து விழும் நிலையில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி
இடிந்து விழும் நிலையில் மேல்நிலைக் குடிநீர் தொட்டி
ADDED : செப் 13, 2024 04:53 AM

விருதுநகர்: விருதுநகர் அருகே கன்னிச்சேரி புதுாரில் மேல்நிலைக் குடிநீர் தொட்டியின் கான்கீரிட் துாண்கள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் படியும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
விருதுநகர் அருகே கன்னிச்சேரிபுதுாரில் மக்களின் குடிநீர் தேவையை போக்குவதற்காக மேல்நிலைக் குடிநீர் அமைக்கப்பட்டது. ஆனால் தொட்டியை முறையாக பராமரிக்காததால் கான்கீரிட் துாண்களில் விரிசல் ஏற்பட்டு நாளடைவில் சிதிலமடைய துவங்கியது.
தற்போது துாண்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் படி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே கன்னிச்சேரிபுதுாரில் சேதமான தொட்டியை இடித்து விட்டு புதிதாக மேல்நிலைக் குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.