ADDED : மார் 28, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியின் ஆண்டு விழா கல்லுாரி தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடந்தது.
கல்லுாரி கணினி அறிவியல் துறைத் தலைவர் கதிர்வளவக்குமார் வரவேற்றார். கல்லுாரி உப தலைவர்கள் ராஜமோகன், ரம்யா, செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, கல்லுாரி முதல்வர் சாரதி, சிறப்பு விருந்தினராக இஸ்ரோ மூத்த விஞ்ஞானி, தலைமைப் பொதுமேலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர். கல்லுாரியின் பல துறைகளில் பயின்று முதலிடம் பெற்ற மாணவர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.