ADDED : மார் 31, 2024 05:29 AM
அ நிறம் | அளவு
காரியாபட்டி, : தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சூர்யா 20, அருண்குமார் 20. மதுரையில் நடந்த நண்பன் வீட்டு விசேசத்திற்கு சென்று நேற்று மதியம் 12:00 மணிக்கு வீலரில் வீடு திரும்பினார்.
டூவீலரை சூர்யா ஓட்டினார். காரியாபட்டி கல்குறிச்சி அருகே வந்த போது நிலை தடுமாறி விழுந்ததில் அருண்குமார் தூக்கி வீசப்பட்டு பலியானார். சூர்யா ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் தப்பினார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
