ADDED : மே 25, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ.,சோமசுந்தரம் தலைமையில் போலீசார் சிவகாசி அருகே சன்னாசிப்பட்டி பகுதியில் நின்ற சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, 50 கிலோ எடை கொண்ட 25 மூடைகளில் 1250 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் கோவிக்காவிளையை சேர்ந்த சதீஷ் 36, துாத்துக்குடி மாவட்டம் சவளப்பேரியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் 26, ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

