/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விலைவாசி குறைய மத்தியில் காங்., ஆட்சி வர வேண்டும்
/
விலைவாசி குறைய மத்தியில் காங்., ஆட்சி வர வேண்டும்
ADDED : ஏப் 16, 2024 03:36 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விலைவாசி குறைய மத்தியில் காங்., ஆட்சி வர வேண்டும், என தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ராணிக்கு ஆதரவாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று காலை11:00 மணிக்கு காமராஜர் சிலை மதுரை ரோடு, இடையபொட்டல் தெரு, மேல, வடக்கு ரத வீதி சந்திப்பு, கீழ ரக வீதி, கைகாட்டி கோவில் பஜார், பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது; மோடி ஆட்சியில் விலைவாசி அதிகரித்து விட்டது. மீண்டும் அவர் வெற்றி பெற்று விட்டால் சிலிண்டர் விலை ரூ.1500ஐ தொட்டுவிடும். விலைவாசியை பற்றி தெரிந்தவர்கள் பெண்கள் தான். எனவே, விலைவாசி குறைந்திட, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வர வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பொறுத்த வரை நான் தான் அமைச்சர், எம்.பி.,எம்.எல்.ஏ.. இங்கு 2011ல் தாமிரபரணி தண்ணீர் கொண்டு வந்தது நான் தான்.
தற்போது மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் கூடுதலாக புதிய தாமிரபரணி குடிநீர் திட்டம் ரூ.120 கோடியில் செயல்படுத்தப்பட்டு, 2 நாளைக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்யப்படும். இப்பகுதியில் நெசவாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு, கூலி உயர்வு கிடைத்திட நடவடிக்கையை எடுக்கப்படும்., என பேசினார்.

