ADDED : ஜூன் 26, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஜூன் 27-
அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுவதில் தொங்கி செல்வது தொடர் கதையாக உள்ளதை டிராபிக் போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர்.
அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள கிராமங்களிலிருந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க அரசு ,தனியார் பஸ்களில் வந்து செல்கின்றனர். அரசு பஸ்கள் போதுமானதாக இல்லாததால், தனியார் பஸ்களில் மாணவர்கள் கூட்டம் இருந்தாலும் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர். இதனால், விபத்து மற்றும் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது. பள்ளி நேரங்களில் டிராபிக் போலீசார் பஸ்சில் தொங்கி செல்லும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பஸ் டிரைவர் கண்டக்டர்களிடமும் அறிவுறுத்த வேண்டும்.
----
படம் உள்ளது
