/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தொடர் முயற்சி; வெற்றியின் முதல் படி
/
தொடர் முயற்சி; வெற்றியின் முதல் படி
ADDED : ஆக 17, 2024 12:48 AM
அருப்புக்கோட்டை : தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றிப் படிக்கட்டுகளை எளிதாக தொட்டு விடலாம் என, மாணவிகளுக்கு இஸ்ரோ விஞ்ஞானி ஞான காந்தி வாசுதேவன் அறிவுரை வழங்கினார்.
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்சுதந்திர தின விழா கருத்தரங்கு நடந்தது. எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசிமுருகன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர்சங்கரசேகரன், ஆண்கள்மேல்நிலை பள்ளி தலைவர் ஜெயகணேசன் முன்னிலை வகித்தனர். பெண்கள் பள்ளி செயலர் ராம்குமார் வரவேற்றார்.
இஸ்ரோ விஞ்ஞானி பத்மஸ்ரீ ஞான காந்தி வாசுதேவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், மாணவர்கள் விடாமுயற்சியுடன் படித்து வந்தால் வெற்றி படிக்கட்டுகளை எளிதாக தொட்டு விடலாம். நான் முதல் முதலில் சிறிய ராக்கெட்டுகளை தயாரிக்கும் பணியில் இருந்தேன். என் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. பலவித முயற்சிக்குப் பின் சிறிய ரக ராக்கெட் ஒன்றை தயாரித்தேன்.
ரன் வே உதவியின்றி போர் விமானம் மேல் எழும்பும் முயற்சியில் வெற்றி கண்டேன். பின் கிரையோஜெனிக் என்ஜின் உருவாக்குவதற்கான ப்ராஜெக்ட் என்னிடம் தரப்பட்டது. அப்போது இஸ்ரோ ரஷ்யாவிடமிருந்து கிரையோஜெனிக் இஞ்சினை வாங்கி பயன்படுத்தியது.
கிரையோஜெனிக் இஞ்சின் பற்றிய தொழில்நுட்பத்தை தெரிந்து கொள்ள ரஷ்யா சென்று 6 ஆண்டுகள் அங்கு இருந்து கற்றுக் கொண்டேன். பின் கிரையோஜெனிக் இஞ்சின் நம்முடைய செயற்கை கோளில் பயன்படுத்தப்பட்டது.
மாணவர்கள் தங்கள் விருப்பமான பாடங்களை எடுத்து படிக்கவேண்டும். தோல்வியில் இருந்து துவளாமல் வெற்றியை நோக்கி நமது பயணம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இவர் தற்போது டாட்டா இஸ்ரோ இணைந்து தயாரிக்கும் பிளையிங் டாக்ஸி திட்டத்திற்கு ப்ராஜெக்ட் லீடராக உள்ளார். மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு விஞ்ஞானி பதிலளித்தார். அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

