/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை
/
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை
தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை
ADDED : மே 04, 2024 04:36 AM
விருதுநகர்: தென்னையில் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் சுபாவாசுகி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
மெழுகுப்பூச்சு போல உள்ள முட்டைகளிலிருந்து வெளிவரும் இளம் குஞ்சுகள், முதிர்ந்த ஈக்கள் ஓலைகளின் அடிப்பரப்பில் சாற்றை உறிஞ்சும். இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளில் படிந்து கரும்பூசணம் படர்கிறது. இவை தென்னை, வாழை, பாக்கு, சப்போட்டா ஆகியவற்றை தாக்குகின்றனர்.
நோய் தாக்குதல் அறிகுறிகள் தெரிந்தவுடன் மஞ்சள் நிறமுடைய பாலீதின் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவி ஒட்டும் பொறிகளை 5 அடிக்கு ஒன்றரை அடி அளவில் ஏக்கருக்கு 10 என 6 அடி உயரத்தில் தொங்க விட்டு ஈக்களை கவர்ந்திருக்கலாம்.
விளக்குப்பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை ஒளிரச் செய்ய வேண்டும்.
பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க ஓலைகளின் அடிப்புறத்தில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்க வேண்டும். கிரைசோபெர்லா என்ற இரை விழுங்கிகளை ஏக்கருக்கு 400, என்கார்சியா என்ற ஓட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 என்ற அளவில் விட வேண்டும்.
கரும்பூசணத்தைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் நீருடன் 25 கிராம் மைதா பசையினை கலந்து ஓலையின் மீது தெளித்தால் வெயிலில் காய்ந்து கரும்பூசணத்துடன் உதிர்ந்து விடும். வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாகும் போது பொறி வண்டுகள் போன்ற இரை விழுங்கிகள் இயற்கையாக உருவாகும், என்றார்.