ADDED : ஜூன் 29, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி, ஜூன் 30 -
திருச்சுழி அருகே வடபாலையை சேர்ந்தவர் விவசாயி திருமேனி, 51, இவருக்கு பிள்ளையார் தொட்டியாங்குளம் ரோட்டில் பம்ப் செட்டுடன் கூடிய தோட்டம் உள்ளது. இதில் மல்லிகைப்பூ பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் மதியம் திருமேனி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சியுள்ளார். மாலையில் மீண்டும் தோட்டத்திற்கு வந்து மோட்டாரை இயக்கிய போது இயங்கவில்லை. மோட்டார் அறைக்கு சென்று பார்த்த போது போர்வெல்லுக்கு செல்லும் 210 மீட்டர் காப்பர் வயர் திருடு போனது தெரிய வந்தது.
திருச்சுழி போலீசார் திருச்சுழி அருகே குச்சம்பட்டி புதுரை சேர்ந்த செல்வம், 32, திருடியது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரிக்கின்றனர்.
____
