ADDED : ஏப் 17, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குபட்டாசுகள் கடத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவேலோக்சபா தேர்தல்2024ஐ முன்னிட்டு இன்று(ஏப். 17) முதல் ஏப். 20 வரையிலும், ஜூன் 2 முதல் 5 வரையிலும் அனைத்து வெடிபொருள் பட்டாசு கடைகள், வெடிபொருள் பட்டாசு கோடவுன்கள் இயங்குவதை நிறுத்தம் செய்து மூட வேண்டும் எனஉரிமையாளர்களிடம் கேட்டு கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்றார்.

