/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் அதிக லாபம் தரும் கிளாக்காய் சாகுபடி
/
விருதுநகரில் அதிக லாபம் தரும் கிளாக்காய் சாகுபடி
ADDED : ஜூன் 02, 2024 03:13 AM

விருதுநகர்: விருதுநகரில் அரிதும் அரிதாக ஒரு சில இடங்களில் மட்டுமே கிளாக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. சிலர் தோட்டத்தில் வளர்க்கின்றனர். சிலர் ஊடு பயிராக வளர்க்கின்றனர். மதிப்பு கூட்டினால் லாபம் அதிகம் தரும் இந்த பயிரை நிறைய விவசாயிகள் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை வழி செய்யுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கிளாக்காய் இதன் அறிவியல் பெயர் கேரிஸா காரன்டஸ். இது வெப்பமண்டல காடுகளில் காணப்படும் ஒரு தாவரம். இலைகள் சிறிய முட்டை வடிவில் காணப்படும். இலைகளுக்கு அடியில் சிறிய முட்கள் இருக்கும். இதன் பழங்களில் இரும்பு சத்து நிறைந்துள்ளது.
பூக்கள் கொத்து கொத்தாக வெண்மை நிறத்தில் காணப்படும். காய்கள், பச்சையும், லேசான சிவப்பும் கலந்த நிறத்தில் இருக்கும். காய்கள் கொத்து கொத்தாக புளிப்பு சுவையுடன் இருக்கும். பழங்கள் கருமை நிறத்தில் இனிப்பாக இருக்கும். இந்த காய்களை மதிப்பு கூட்டி ஊறுகாயாக வெளிமாவட்டங்களில் விற்கின்றனர்.
மேலும் கிளாக்காயால்தோலுக்கு நன்மை அதிகம் ஏற்படுகிறது. நல்ல பலன் வாய்ந்த கிளாக்காய் வெப்பமண்டல காடுகளில் வளரும் நிலையில், மாவட்டத்தில் வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் கிளாக்காய் சாகுபடி செய்ய தோட்டக்கலைத்துறை வழிவகை செய்தால் அதை மதிப்பு கூட்டி விவசாயிகள் லாபம் அடைவர்.