/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆடிக்காற்றிலும் கைகொடுக்கும் வெண்டை சாகுபடி
/
ஆடிக்காற்றிலும் கைகொடுக்கும் வெண்டை சாகுபடி
ADDED : ஆக 18, 2024 05:03 AM

விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் ஆடிக்காற்றிலும் கை கொடுக்கும் வெண்டை சாகுபடியால் விவசாயிகள் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் 110 எக்டேருக்கு வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தினசரி சமையலின் முக்கிய அங்கமாக உள்ள வெண்டைக்கு சீசன் எப்போதுமே தான். வழக்கமாக 4 மாதம் வரை காய் தரும். நன்றாக பக்குவம், பராமரிப்பு செய்தால் 5 முதல் 6 மாதம் வரை விளைச்சலை எதிர்பார்க்க முடிகிறது.
ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, விருதுநகர், சிவகாசி பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வெண்டைக்கு பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் மட்டும் இலை மஞ்சள் நிறமாகி காய்ப்பு திறன் குறையும். மருந்து தெளித்த பின் தான் சரியாகும். தற்போது கிலோ ரூ.30க்கு விற்பனை ஆகிறது. மழைக்காலம் வந்தால் ரூ.10 தான் கொள்முதல் ஆகும். விருதுநகர் மார்க்கெட்டிற்கு மதுரை பகுதிகளில் இருந்தும் அதிகளவில் வெண்டை வந்தால் நிச்சயம் விலை குறையவே வாய்ப்புள்ளது.
இருப்பினும் தற்போது ஆடி மாதத்திலும் விளைச்சல் நன்றாகஇருப்பதால் வெண்டை சாகுபடி கை கொடுப்பதாக விருதுநகர் விவசாயிகள் கூறுகின்றனர். தோட்டக்கலைத்துறை வெண்டையின் பரப்பை இன்னும் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

