ADDED : செப் 11, 2024 12:23 AM

அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி கிளை நுாலகம் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
பாலையம்பட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, கிளை நுாலகம் அமைக்கப்பட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இந்தப் பகுதி மக்களுக்கு படிப்பதற்கு வசதியாக இருந்தது. பல அரிய வகை புத்தகங்கள் இங்கு உள்ளன. பல ஆண்டுகள் ஆகி விட்டதால் கட்டடம் சேதமடைந்து விட்டது. கூரை விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் ஒழுகுகிறது.
புத்தகங்கள் நனைந்து பாழாகின்றன. மேலும், கட்டடத்தை சுற்றி சுகாதார கேடாக உள்ளது. குடிமகன்களின் திறந்த வெளி பாராகவும் உள்ளது. மாவட்ட நிர்வாகம் புதிய நுாலகம் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
