/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சேதமடைந்த தளம்: பயணிகள் அவதி
/
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சேதமடைந்த தளம்: பயணிகள் அவதி
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சேதமடைந்த தளம்: பயணிகள் அவதி
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சேதமடைந்த தளம்: பயணிகள் அவதி
ADDED : ஏப் 13, 2024 02:26 AM

சிவகாசி : சிவகாசி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தளம் சேதம் அடைந்து இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி பஸ் ஸ்டாண்டில் தினமும் 300 க்கும் மேற்பட்ட முறை அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. அருகிலுள்ள கிராமங்கள் தவிர சாத்துார், விருதுநகர், ஸ்ரீவி., ராஜபாளையம் உள்ளிட்ட நகரிலிருந்து பல்வேறு பணி நிமித்தமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பஸ் ஸ்டாண்டில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் தரைதளம் சமமாக இல்லாமல் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.
கற்கள் பெயர்ந்து இருப்பதால் வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகின்றது. தவிர பஸ் வரும்போது அவசரமாக ஏறுவதற்காக ஓடி செல்லும் பயணிகள் கற்களால் இடறி விழுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டில் தளங்களை சமப்படுத்த வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.