/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான ரோடு, துார்வாராத வாறுகால், சாய்ந்த மின்கம்பம்
/
சேதமான ரோடு, துார்வாராத வாறுகால், சாய்ந்த மின்கம்பம்
சேதமான ரோடு, துார்வாராத வாறுகால், சாய்ந்த மின்கம்பம்
சேதமான ரோடு, துார்வாராத வாறுகால், சாய்ந்த மின்கம்பம்
ADDED : செப் 11, 2024 12:21 AM

சிவகாசி : சேதமான ரோடு, துார்வாராத வாறுகால், சாய்ந்த நிலையில் மின்கம்பம் தெரு விளக்குகள் இல்லை என சிவகாசி மாநகராட்சி 48 வது வார்டு காளியப்பா நகர் குடியிருப்புவாசிகள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.
இதுகுறித்து சிவகாசி காளியப்பா நகர் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் முருகேசன், ஜெயசங்கர், ஜெய் கணேஷ், அதிபதி, தங்கராஜ், மகேந்திரன் கூறியதாவது, தெருக்களில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரோடு சேதமடைந்து விட்டது. ஒரு சில தெருக்களில் ரோடு போடவில்லை. இதனால் மழைக்காலங்களில் தெரு முழுவதுமே தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றது.
ரயில்வே மேம்பாலம் பணிகள் நடப்பதால் மாற்றுப்பாதையில் வருகின்ற பள்ளி மாணவர்கள் காளியப்பா நகருக்குள் வந்து செல்கின்றனர். இதனால் அதிகமாக போக்குவரத்து ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். வாறுகால் துார்வாரப்படாததால் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது.
இதனால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகின்றது. குடியிருப்பு பகுதிக்குள் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் அச்சம் ஏற்படுகின்றது. ஒரு சில இடங்களில் உயர் அழுத்த மின் வயர்கள் தாழ்வாக செல்கின்றது. பன்றிகள் கழிவுநீரில் புரண்டு அப்படியே தெருக்களுக்குள் நடமாடுவதால் தொற்றுநோய் ஏற்படுகின்றது.
விளாம்பட்டி ரோடு வழியாக காளியப்பா நகர் நுழைவாயிலில் தெருவிளக்கு இல்லாததால் அப்பகுதி முழுவதுமே இருளாக உள்ளது. இதே இடத்தில் உள்ள வாறுகால் தடுப்புச் சுவர் சேதமடைந்து விழுந்துவிட்டது. ரோடும் சேதம் அடைந்து இருப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது.
காளியப்பா நகர் குடியிருப்பு பகுதி வழியாகச் செல்லும் ஓடையில் முட்புதர்கள், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தண்ணீர் வெளியேற வழி இல்லை. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அதிகமாக நடமாடுகின்றது. இங்குள்ள பூங்காவிற்குரிய இடம் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
காளியப்பா நகர் அருகே செல்லும் விளாம்பட்டி மெயின் ரோட்டில் உள்ள வாறுகால் துார்வாரப்படாததால் மழைக்காலங்களில் தண்ணீர் ரோட்டில் தேங்கி விடுகின்றது. காளியப்பா நகர், ஜே.நகர், அ.சி. காலனியை மையப்படுத்தி இங்கு ரேஷன் கடை அமைக்க வேண்டும்,. என்றனர்.

