/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் முறிந்த மரக்கிளையால் ஆபத்து
/
காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் முறிந்த மரக்கிளையால் ஆபத்து
காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் முறிந்த மரக்கிளையால் ஆபத்து
காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் முறிந்த மரக்கிளையால் ஆபத்து
ADDED : மே 23, 2024 02:39 AM

நரிக்குடி: பலத்த காற்றுக்கு காரியாபட்டி நரிக்குடி ரோட்டோரத்தில் முறிந்த மரக்கிளை தொங்கி விபத்து அபாயத்தில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர்.
நரிக்குடி பகுதியில் அவ்வப்போது பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் 5 நாட்களுக்கு முன் நரிக்குடி எஸ்.மறைக்குளம் பகுதியில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது.
அப்போது காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் எஸ். மறைக்குளம் அருகே 50 ஆண்டுகளை கடந்த மரத்தின் கிளை முறிவு ஏற்பட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது.
5 நாட்களாகியும் அதனை அப்புறப்படுத்த யாரும் அதிகாரிகள் முன் வரவில்லை. மீண்டும் பலத்த காற்று வீசினால் மரக் கிளை முறிந்து விழும் ஆபத்து உள்ளது. அந்த வழியாக வாகனங்களில் கடந்து செல்பவர்கள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் கடந்து செல்கின்றனர்.
விபத்து ஏற்படும் முன் முறிந்த மரக்கிளையை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

