/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உயிர் பலிக்கு பின்னும் சமாளிப்பு-- நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்
/
உயிர் பலிக்கு பின்னும் சமாளிப்பு-- நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்
உயிர் பலிக்கு பின்னும் சமாளிப்பு-- நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்
உயிர் பலிக்கு பின்னும் சமாளிப்பு-- நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியம்
ADDED : மே 19, 2024 11:39 PM

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலை நடுவே மேடு பள்ளத்தில் தடுமாறி விழுந்து ராணுவ வீரர் மனைவி உயிரிழந்த நிலையில் கண் துடைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்துார் வழியான தேசிய நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக ஆண்டு கணக்கில் இருந்து வருவதுடன் பராமரிப்பு பணிகளை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து டூவீலரில் ராஜபாளையத்திற்கு தனது மனைவியுடன் வந்த முன்னாள் ராணுவ வீரர் நெடுஞ்சாலையில் சேதம் அடைந்துள்ள பகுதியில் இறங்கி ஏறியதில் தடுமாறி விழுந்ததில் மனைவி செந்தாமரை செல்வி துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அதுவரை ரோடுகுழிகளை கண்டு கொள்ளாமல் இருந்த நெடுஞ்சாலை துறையினர் நேற்று அதிகாலை வரை அவசர கதியில் பழைய தார் சாலை கழிவுகளை பள்ளங்களில் நிரப்பி வைத்துள்ளனர். அதிலும் ரோட்டின் நடுவே சில இடங்களில் சரி செய்யாமல் விட்டுள்ளதுடன், நிரப்பப்பட்ட பள்ளங்களில் கற்கள் சிதறி வெளியேறுகிறது. அத்துடன் காயல்குடி ஆற்றின் வளைவு பகுதி நெடுஞ்சாலை பக்கவாட்டில் உள்ள பள்ளங்களை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
இரண்டு பக்கமும் வாகனங்கள் வரும்போது ஒதுங்க வழியில்லாமல் சிறிய வாகனங்களில் வருவோர் இது போன்ற பள்ளங்களில் தடுமாறி விழுந்து விபத்து நேர்வதையும் சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையை புதிதாக அமைக்கும் வரையிலாவது அடிக்கடி பராமரிப்பு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

