/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி காய்கறி மார்க்கெட்டை ரூ.5.50 கோடியில் மேம்படுத்த முடிவு
/
சிவகாசி காய்கறி மார்க்கெட்டை ரூ.5.50 கோடியில் மேம்படுத்த முடிவு
சிவகாசி காய்கறி மார்க்கெட்டை ரூ.5.50 கோடியில் மேம்படுத்த முடிவு
சிவகாசி காய்கறி மார்க்கெட்டை ரூ.5.50 கோடியில் மேம்படுத்த முடிவு
ADDED : மே 23, 2024 02:49 AM
சிவகாசி: சிவகாசியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.5.50 கோடியில் அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இம்மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் ஒரு பகுதி கட்டடமாகவும், மற்றொரு பகுதி தகர செட்டிலும் அமைந்துள்ளது. இந்த கடைகள் முன் ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைப்பதால், இட நெருக்கடி ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி சார்பில் பலமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டாலும், தொடர்ந்து பாதையில் கடைகள் அமைப்பது தொடர்ந்து வருகிறது. மழைக்காலங்களில் மார்கெட்டில் மழைநீர் தேங்கி சேறும் சகதியமாக மாறுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
சிவகாசி நகரின் மைய பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் வாகன காப்பகம் இல்லாததால் மக்கள் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி விட்டு மார்க்கெட்டுக்கு செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் காய்கறி மார்க்கெட்டை மேம்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநகரத்திற்கு அனுப்பப்பட்டது.
அதில் அண்ணாதுரை மார்க்கெட்டில் உள்ள தகர செட் கடைகளை அகற்றிவிட்டு, 59 கடைகளுடன் புதிய வணிக வளாகம் கட்டவும், சுகாதார வளாகம், ரோடு, இருசக்கர வாகன நிறுத்தும் இடம், பழைய சுகாதார வளாகத்தை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இப்பணிகளுக்கு ஒப்புதல் அளித்த நகராட்சி நிர்வாக இயக்குநரகம், நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

