ADDED : மே 13, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியில் 3 வயதுள்ள ஆண் மான், பெண் மான் ஆகிய இரண்டும் இரை, தண்ணீர் தேடி ஊருக்குள் வந்தது.
இதில் பெண் மான் தப்பியோடிய நிலையில் ஆண் மானை நாய்கள் விரட்டி கடித்துள்ளன. இதை பார்த்த, அங்கிருந்த மக்கள் நாய்களிடம் இருந்து ஆண் மானை மீட்டனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்துார் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் காயமடைந்த மானை ஒப்படைத்தனர்.
