/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் சீரமைப்பு பணி தாமதம் சர்வீஸ் ரோடு பணி மந்தம் பள்ளி மாணவர்கள் அவஸ்தை
/
குழாய் சீரமைப்பு பணி தாமதம் சர்வீஸ் ரோடு பணி மந்தம் பள்ளி மாணவர்கள் அவஸ்தை
குழாய் சீரமைப்பு பணி தாமதம் சர்வீஸ் ரோடு பணி மந்தம் பள்ளி மாணவர்கள் அவஸ்தை
குழாய் சீரமைப்பு பணி தாமதம் சர்வீஸ் ரோடு பணி மந்தம் பள்ளி மாணவர்கள் அவஸ்தை
ADDED : மார் 05, 2025 06:09 AM

விருதுநகர்: விருதுநகர் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி செல்ல சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துவங்கிய நிலையில் ரோட்டை சமன்படுத்தி உள்ளது. அப்போது குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்க இழுபறி நீடிப்பதாலும், வடிகால் வாரியம் அனுமதி தாமதம் ஆவதாலும் ரோடு பணி முழுமடையாமல் உள்ளது. மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
விருதுநகர் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் வசதிக்கு சர்வீஸ் ரோடு தேவையாக இருந்தது. இந்நிலையில் ரோடு வசதி ஏற்படுத்த கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சர்வீஸ் ரோடு போட முன்வந்துள்ளது. இதற்காக ரோடு அமைய உள்ள பகுதியை தோண்டி சமன்படுத்தும் போது குடிநீர் வடிகால் வாரியத்தின் குழாய் சேதமாகி உள்ளது.
இதை நெடுஞ்சாலை ஆணையம் தான் சரி செய்ய வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம் கூறிய நிலையில், சரி செய்வதற்கான திட்டமதிப்பீட்டை வழங்க தாமதம் செய்து வருகிறது. இதனால் ரோடு பணி முழுமையடையாமல் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க குழாய் பணிக்கு தாமதம் செய்யாது அனுமதி வழங்க குடிநீர் வடிகால் வாரியம் முன்வர வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கென்னடி கூறுகையில், “திட்டமதிப்பீடு இன்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வழங்கப்படும். பணியை வாரிய அலுவலர்கள் மேற்பார்வையில் நெடுஞ்சாலை அலுவலர்கள் செய்வர்,” என்றார்.