/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமதமாகும் தேசிய நெடுஞ்சாலை பாலப்பணி
/
தாமதமாகும் தேசிய நெடுஞ்சாலை பாலப்பணி
ADDED : ஜூலை 09, 2024 04:28 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும்பணி தாமதமாகி வருவதால், அதிவேகத்தில் வரும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில்இருந்து கிருஷ்ணன்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பூவானி விலக்கு, வி.பி.எம்.எம்., கல்லூரி ஆகிய இடங்களில் பாலங்கள் அகலப்படுத்தி கட்டும் பணி நடந்தது. இதில் பூவாணி விலக்கு அருகே பணிகள் முடிவடைந்துள்ளது.
வி.பி.எம்.எம். கல்லுாரிஅருகே தற்போது ரோட்டில் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிவேகத்தில்வரும் வாகனங்கள் மிக அருகில் வரும் போது தான் பாலத்தை கவனித்து வேகத்தை குறைக்கின்றனர். இதில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் ஒரு பெண் பலியானார். பலர் காயமடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஜீப் தலைகுப்புற கவிழ்ந்தது. எனவே, பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாலம் கட்டுமான பணிகள்முடிவடைந்துள்ளது. இரு புறமும் ரோடு அகலப்படுத்தி தடுப்புச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. இன்னும் 10 நாட்களுக்குள் பாலம் திறந்து விடப்படும் என தெரிவித்தனர்.