/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டுச்சாவடிகளுக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு; சாமியானா, சாய்தள வசதிகள் ஏற்பாடு

ADDED : ஏப் 19, 2024 04:51 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. முதியவர்களை வெயில் தாக்கத்தில் இருந்து காக்க சாமியானா பந்தல், மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சாய்தள வசதிகள், சக்கர நாற்காலிகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் லோக்சபா தொகுதியில் 1680 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு பணிபுரிய 8187 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4066 ஓட்டுபதிவு இயந்திரங்களும், 2033 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2202 விவிபேட் (ஓட்டுப்பதிவு சரிபார்க்கும் இயந்திரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவை நேற்று ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ஓட்டுச்சாவடிகளில் முதியவர்கள் எளிதில் ஓட்டளிக்கவும், வெயில் தாக்கத்தில் இருந்து காக்கவும் சாமியானா பந்தல் போடப்பட்டுள்ளன. அதே போல மாற்றுத்திறனாளிகள் வந்திறங்கினால் அவர்களை ஓட்டுச்சாவடி வரை அழைத்து வர சக்கர நாற்காலிகளும், அதே போல் அதில் இருந்து அழைத்து செல்ல வசதியாக சாய்தளங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் இது போன்ற ஏற்பாடுகளை செய்துள்ளது. அதே போல் ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான மை, பென்சில், பேனா உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் இன்று நடக்க உள்ள தேர்தலுக்கு தேவையான அனைத்து ஆயத்த பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.