நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை பட்டியலில் சேர்த்திட மத்திய அரசை வலியுறுத்தியும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்திட வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார பாதிரியார் சந்தன சகாயம் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் புனிதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் உதவி பாதிரியார் மரிய ஆனந்த், பிரகாசம் உட்பட பலர் பேசினர். ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கருப்பு கொடி அணிந்து பங்கேற்றனர். ஆசிரியை சவரியம்மாள் நன்றி கூறினார்.

