
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சார்பில் 350 டெங்கு மஸ்துார்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத் துணைத் தலைவர் லியாகத் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் வைரவன், பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கம் பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன், ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகோபாலன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செல்வின், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட இணை செயலாளர் சந்திரசேகர், மேனாள் மாநில துணைத் தலைவர் கண்ணன், கொசு ஒழிப்பு பணியாளர் சங்க மாநில நிதி காப்பாளர் சீனிவாசன் பேசினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர்கள் கருப்பசாமி நன்றிக் கூறினார்.