ADDED : மே 24, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா எஸ்.ராமச்சந்திரபுரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமங்களுக்கு இடையே ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது.
குடியிருப்பு, பள்ளி அருகே மதுக்கடை அமைந்துள்ளதால் மக்கள், மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை இடமாற்றம் செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி நிர்வாகிகள் பாலன், கரிகால பாண்டியன், நாராயணன் பேசினர். திரளான மக்கள் பங்கேற்றனர். கிருஷ்ணன் கோவில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
