ADDED : ஜூலை 08, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
திருச்சுழி, ஜூலை 9-
பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி, திருச்சுழி அருகே கேட்ட நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தென் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராம் பாண்டியன் முன்னிலை வகித்தார். விவசாய சங்க நிர்வாகிகள் கோபால், நாகராஜ், அழகர்சாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் குருசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
____
