ADDED : ஜூலை 17, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0–ஐ தமிழக அரசு கைவிட வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பரமசிவம் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர்கள் குணசீலி, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப்பையா, தோட்டக்கலை அலுவலர்கள், துணை தோட்டக்கலை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பங்கேற்றனர்.
