/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
டெங்கு மஸ்துார்கள் காத்திருப்பு போராட்டம்
/
டெங்கு மஸ்துார்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 10, 2024 11:47 PM

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் டெங்கு மஸ்துார் பணியாளர்கள் 350 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்துகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொசுப்புழு ஒழிப்பு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கண்ணன் முத்தரசு, செயலாளர் வைரவன், வளாக கிளை தலைவர் கண்ணன், நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க கிளை செயலாளர் நடராஜன், முன்னாள் மாநில செயலாளர் கண்ணன் பேசினர்.
மனு கொடுக்கும் போராட்டமாக நடத்தப்பட்டு, கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு எட்டப்படாததால் காத்திருப்பு போரட்டமாக அறிவித்து தொடர்ந்து வருகின்றனர்.