ADDED : மே 10, 2026 10:51 PM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துாரில் த.வெ.க கட்சியினர் நேற்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
தமிழகத்தில் த.வெ.க., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நேற்று அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதை தொடர்ந்து சாத்துார் மதுரை பஸ் ஸ்டாப், பஸ் ஸ்டாண்ட், முக்குராந்தல் படந்தால் பஸ் ஸ்டாப், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்தும் மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
