ADDED : மே 29, 2026 06:51 PM
சேத்துார், மே 39-
ராஜபாளையம் அடுத்த தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் வைகாசி தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இக்கோயிலில் மே 21-ல் கொடியேற்றத்துடன் வைகாசி விழா தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து அம்மையப்பர் தவம் பெற்ற நாயகி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை தேரோட்ட நடந்தது.
அலங்காரத்தில் பிரியா விடை உடன் பெரிய தேரிலும், அன்னை தவம்பெற்ற நாயகி சிறிய தேரிலும் சுற்றி வந்தார். கோயில் பரம்பரை அறங்காவலர் துரை ரத்னகுமார், செயல் அலுவலர் முருகன் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரின் பின் கும்பிடு கர்ணம் எனும் அங்க பிரதட்சணம் செய்து திரளானோர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
