/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் கனமழையால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
/
சதுரகிரியில் கனமழையால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ADDED : ஆக 17, 2024 01:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இன்று முதல் ஆவணி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இக்கோயிலில் இன்று (ஆக.17) ஆவணி மாத பிரதோஷம், ஆக. 19ல் பவுர்ணமி வழிபாடு நடக்க உள்ளது. இதனை முன்னிட்டு முதலில் நான்கு நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் நேற்று மதியம் முதல் சதுரகிரி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் ஓடையில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் இன்று சூழ்நிலையை பொறுத்தே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
ஆனால் நேற்று மாலை சதுரகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்ததால் பக்தர்களுக்கு பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு இன்று முதல் 4 நாட்களுக்கும் அனுமதி கிடையாது என ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

