/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண் ரோடால் தடுமாற்றம், வாறுகால் வசதி இல்லை; விருதுநகர் ஆர்.வி.ஆர்., நகர் மக்கள் அவதி
/
மண் ரோடால் தடுமாற்றம், வாறுகால் வசதி இல்லை; விருதுநகர் ஆர்.வி.ஆர்., நகர் மக்கள் அவதி
மண் ரோடால் தடுமாற்றம், வாறுகால் வசதி இல்லை; விருதுநகர் ஆர்.வி.ஆர்., நகர் மக்கள் அவதி
மண் ரோடால் தடுமாற்றம், வாறுகால் வசதி இல்லை; விருதுநகர் ஆர்.வி.ஆர்., நகர் மக்கள் அவதி
ADDED : மே 13, 2024 12:36 AM

விருதுநகர் : மண் ரோடு, வாறுகாலால் மழைக்காலங்களில் மழை நீர், கழிவு நீர் சேர்ந்து ரோட்டில் சென்று துார்நாற்றம் வீசி சீர்கேடு, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காததால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் விருதுநகரின் ரோசல்பட்டி ஆர்.வி.ஆர்., நகர் மக்கள்.
விருதுநகரின் ரோசல்பட்டி ஊராட்சியில் ஆர்.வி.ஆர்., நகர் உள்ளது. இங்கு 2 பிரதான தெருக்களும், 6 குறுக்குத் தெருக்களும் உள்ளது. விருதுநகர் நகராட்சிக்கு அருகே வசிக்க விரும்பிய பலர் இங்கு குடியேறி 20 ஆண்டுகளாக வசிக்கின்றனர்.
இங்குள்ள பிரதான ரோடு பல ஆண்டுகளாக மண்ரோடாக உள்ளது. மேலும் குறுக்குத் தெருக்களிலும் புதிய ரோடு அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் ரோடு முழுவதும் சேறும் சகதியுமாக மாறி வாகனங்களில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
மேலும் வீடுகளில் இருந்து வெளியேற்றும் கழிவு நீர் செல்ல வாறுகால் வசதி இல்லை. வீட்டின் அருகிலேயே தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து ரோட்டில் செல்வதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. இதனால் விலைக்கு குடிநீர் வாங்குகின்றனர். தெருவிளக்குகள் இல்லாததால் இரவு பணிக்கு சென்று திரும்புவோர் சிரமப்படுகின்றனர்.
பிரதான ரோடுகள், குறுக்குத் தெருக்களில் புதிய ரோடு அமைக்காமல் பல ஆண்டுகளாக மண்ரோடாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
- - அன்னலட்சுமி, குடும்பத் தலைவி.
வீடுகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. குப்பை அள்ளப்படுவதில்லை. எனவே குடிநீர் இணைப்பு வழங்கவும், குப்பை அள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -அழகேஸ்வரன், தனியார் ஊழியர்.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வடிந்து செல்ல முறையான வாறுகால்கள் இல்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே வாறுகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
- - நவ்பல், தனியார் ஊழியர்.