தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நோய் தாக்குதல்: வயலாய்வு

நோய் தாக்குதல்: வயலாய்வு

நோய் தாக்குதல்: வயலாய்வு


ADDED : ஏப் 29, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2024 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: வத்திராயிருப்பு பகுதிகளில் தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல், மா மரத்தில் கரும் பூஞ்ஞாணம் நோய் தாக்குதல் குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வயலாய்வு செய்தனர்.

விருதுநகர் தோட்டக்கலை துணை இயக்குநர் சுபாவாசுகி, உதவி இயக்குநர்கள் நடராஜன், சங்கீதா, பருத்தி ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் விஜயராகவன், உதவி தோட்டக்கலை அலுவலர் அருண்பாண்டியன் ஆகியோர் வத்திராயிருப்பு பகுதிகளில் வயலாய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 8 முதல் 10 எண்கள் மரத்தில் கட்டலாம், கிரைசோபிட் இரை விழுங்கிகள் ஏக்கருக்கு 400 எண்கள், எண்கார்ஸியா ஒட்டுண்ணி ஏக்கருக்கு 100 எண்கள் விடுதல், வேப்ப எண்ணெய் 5 சதவீதம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us