ADDED : ஏப் 04, 2024 11:37 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: தென்காசி தனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
நேற்று காலை 7:30 மணிக்கு மம்சாபுரம் இடையங்குளம் பகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய ராணி மம்சாபுரம், கோட்டைப்பட்டி, திருவண்ணாமலை, தொட்டியபட்டி உட்பட பல்வேறு கிராமங்களிலும், மாலை 4:00 மணிக்கு மேல் வன்னியம்பட்டி, பிள்ளையார்குளம், ராமலிங்கபுரம், அச்சம்தவிர்த்தான், மல்லி, தைலாகுளம் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இன்று (ஏப் 5) வத்திராயிருப்பு ஒன்றியத்திலும், நாளை (ஏப்.6) ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியிலும் வேட்பாளர் ராணி பிரசாரம் செய்கிறார்.
