/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., ஆட்சியில் தீப்பெட்டி பட்டாசு தொழில்கள் பாதிப்பு
/
தி.மு.க., ஆட்சியில் தீப்பெட்டி பட்டாசு தொழில்கள் பாதிப்பு
தி.மு.க., ஆட்சியில் தீப்பெட்டி பட்டாசு தொழில்கள் பாதிப்பு
தி.மு.க., ஆட்சியில் தீப்பெட்டி பட்டாசு தொழில்கள் பாதிப்பு
ADDED : செப் 17, 2024 04:25 AM
சிவகாசி, : தி.மு.க., ஆட்சியில் தீப்பெட்டி, பட்டாசு, நெசவு என அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது, என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.
சிவகாசியில் அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, தி.மு.க., ஆட்சியில் மின் கட்டணம், சொத்து வரி, விலைவாசி உயர்ந்து விட்டது. ஆனால் மக்களின் வருமானம் உயரவில்லை. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். முதல்வர் சூட்டிங் நடத்தி கொண்டிருக்கிறார்.
விளம்பரத்தால் வந்த தி.மு.க., ஆட்சி நிலைக்காது. தீப்பெட்டி, பட்டாசு, நெசவு என அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து மணலை அள்ளி கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர். தமிழகத்தில் கட்டுமான பணிக்கு மணல் கிடைப்பதில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் தமிழக உரிமைக்காக லோக்சபாவை முடக்கி, வேண்டியதை பெற்றோம்.
40 தொகுதிகளில் வெற்றி பெற்ற தி.மு.க., நிதி கேட்டு மத்திய அரசுக்கு மனு எழுதி கொண்டிருக்கிறது. 2025 ஜன.க்குள் பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., வலுவான இயக்கமாக ஒன்றிணைந்து, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

