/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் தி.மு.க., அரசு: வாசன் குற்றச்சாட்டு

ADDED : ஏப் 03, 2024 07:06 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ''வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் தமிழக மக்களை தி.மு.க., அரசு ஏமாற்றிவருகிறது''என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் த.மா.கா., தலைவர் வாசன் குற்றம் சாட்டினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணியின் தமிழக மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து வாசன் பேசியதாவது:
தி.மு.க., அரசு. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் என்று கூறி பாதி பேருக்கு கொடுத்தும், பாதிப்பேருக்கு கொடுக்காமலும், மீதியை தங்கள் கட்சி மகளிர் அணிக்கு கொடுக்கின்றன்றனர்.
காலையில் பெண்கள் பெறும் பணம், மாலையில் அவர்கள் வீட்டு ஆண்கள் பறித்துச் சென்று டாஸ்மாக் மூலம் அரசு கஜானாக்கு கொடுக்கின்றனர். இது தான் திராவிட மாடல் அரசு.
கச்சத்தீவை மீட்பதில் மத்திய அரசு வெற்றி பெறும். அதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். மத்தியில் பா.ஜ., ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி. அப்போது இந்தியாவில் நல்லாட்சி செய்து வல்லரசாக மோடி மாற்றுவார் -என பேசினார்.