/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க.,அமைச்சர்கள் ஊழல் புகாரில் உள்ளே போய் வெளியே வருகின்றனர்
/
தி.மு.க.,அமைச்சர்கள் ஊழல் புகாரில் உள்ளே போய் வெளியே வருகின்றனர்
தி.மு.க.,அமைச்சர்கள் ஊழல் புகாரில் உள்ளே போய் வெளியே வருகின்றனர்
தி.மு.க.,அமைச்சர்கள் ஊழல் புகாரில் உள்ளே போய் வெளியே வருகின்றனர்
ADDED : ஏப் 10, 2024 06:28 AM

சாத்துார் : ஊழல் புகார் காரணமாக தி.மு.க.அமைச்சர்கள் அடிக்கடி உள்ளே போய் வெளியே வருகின்றனர் என விருதுநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் ராதிகா முக்குராந்தலில் தெரிவித்தார்.
சாத்துார் சின்னக்காமன் பட்டியில் பிரசாரம் செய்த ராதிகா, அவரது கணவர் நடிகர் சரத்குமார் ஆகியோர் யுகாதி ஆண்டு வாழ்த்துக்களை தெலுங்கில் தெரிவித்தனர்.பொதுமக்களும் அவர்களிடம் தெலுங்கில் பேசினர்.
ராதிகா பிரசாரத்தின் போது கூறியதாவது:
விருதுநகர் தொகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. மீண்டும் பிரதமராக மோடிதான் வருவார். நான் வெற்றி பெற்றால் மத்திய ரசிடம் பேசி உங்களுக்கு தேவையான அனைத்து நல்ல திட்டங்களையும் பெற்றுத் தருவேன்.
தி.மு.க. அரசு 3 ஆண்டு களாக மக்களுக்கு கொடுத்த 546 வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தி.மு.க அமைச்சர்கள் ஊழல் புகாரில் சிக்கி அடிக்கடி உள்ளே போய் வெளியே வருகின்றனர் ஆனால் மோடி அரசு 10 ஆண்டுகளாக எந்த ஒரு ஊழல் புகார் இல்லாமல் நேர்மையான ஆட்சியாக நடந்தது.
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க சிகரெட் லைட்டர்க்கு வரியை உயர்த்தி உறுதியான நடவடிக்கை எடுத்தவர் மோடி. பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமனிடம் நான் பேசிய போது கண்டிப்பாக பா.ஜ., அரசு பட்டாசு தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பட்டாசுக்கானா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. அதில் ஒரு சில பேப்பர்கள் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டி உள்ளது. பா.ஜ., அரசு அமைந்த உடன் மீண்டும் பட்டாசு சரவெடி தயாரிக்க அனுமதி பெற்றுத் தரப்படும்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூற முடியுமா. மக்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்ற மத்திய அரசால் மட்டுமே முடியும் நான் நிச்சயம் உங்களுக்கு தேவையான நன்மைகளை பெற்றுத் தருவேன் என்றார்.
சின்னக் காமன்பட்டி ,மேட்டமலை, வெங்கடாசலபுரம், சாத்துார் ஒ மேட்டுப்பட்டி உள்பட பத்துக்கு மேற்பட்ட பகுதியில் பிரசாரம் செய்தனர்.

