ADDED : ஜூலை 03, 2026 10:44 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஜூலை 4-
அருப்புக்கோட்டையில் இஸ்லாத் இட ஒதுக்கீட்டை மறுக்கும் தீர்ப்பை கண்டித்து த.ம.மு.க., ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், இஸ்லாமை தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் மதார் கான் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் முஸ்தபா கண்டன பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
___
