/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அளவீடு செய்வதில் இழுத்தடிப்பு; கிடப்பில் வாறுகால் கட்டும் பணி
/
அளவீடு செய்வதில் இழுத்தடிப்பு; கிடப்பில் வாறுகால் கட்டும் பணி
அளவீடு செய்வதில் இழுத்தடிப்பு; கிடப்பில் வாறுகால் கட்டும் பணி
அளவீடு செய்வதில் இழுத்தடிப்பு; கிடப்பில் வாறுகால் கட்டும் பணி
ADDED : ஏப் 09, 2024 12:13 AM

சிவகாசி : சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சி காமராஜபுரம் காலனியில் ஆக்கிரமிப்பு அகற்ற அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் தாமதப்படுத்துவதால் வாறுகால் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் அவதியில் உள்ளனர்.
சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி காமராஜபுரம் காலனியில் வாறுகால் சேதமடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வாறுகால் அமைப்பதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பு பணிகள் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக வருவாய் துறையினரால் அளவீடு செய்யப்பட்டு அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முதற்கட்ட பணி துவங்கியது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் வருவாய்த் துறையினர் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றலாம் என உத்தரவிட்டது.
ஆனால் ஒரு மாதம் ஆகியும் அளவீடு செய்யும் பணி துவங்கவில்லை. இதனால் வாறுகால் கட்டும் பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
ஊராட்சித் தலைவர், ராஜபாண்டி, நீதிமன்றம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வருவாய் துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அளவீடு செய்யாததால் வாறுகால் கட்டும் பணியை துவக்க முடியவில்லை, என்றார்.

