ADDED : ஏப் 14, 2024 03:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செவல்பட்டி அருகே ரேஷன் கடை முன் கழிவுநீர் குழி உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் அருகே செவல்பட்டி கிராமம் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள இங்கு 1500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன் பக்கவாட்டில் பெரிய குழியில் நாள்பட்ட தண்ணீர் தேங்கி தற்போது கழிவுநீர் ஆகி விட்டது. பாசி படர்ந்து பச்சை நிறத்தில் இருப்பதால் கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்புள்ளது. அதே நேரம் சுகாதாரக்கேடு அபாயமும் அதிகளவில் உள்ளது. தேவையின்றி கழிவுநீர் தேக்கமாக உள்ள இந்த குழியை மூட வேண்டும்.

