ADDED : ஏப் 24, 2024 12:16 AM

அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகரில் கோடை நேரத்திலும் மனம் தளராமல் குடிநீர் லீக் ஆவதால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
விருதுநகர் நகர்ப்பகுதிகளை சுற்றி அடிக்கடி குடிநீர் வீணாகிறது. கோடை காலம் வந்தாலே 10 முதல் 15 நாட்களில் தான் குடிநீர் வினியோகம் ஆகும். இந்நிலையில் தற்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் விதமாக சில பகுதிகளில் அடிக்கடி குடிநீர் பைப்லைன் உடைந்து லீக் ஆகி வருகிறது. நேற்று விருதுநகர் சுப்பையா நாடார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே லீக் ஆகி குடிநீர் தேங்கியிருந்தது. இதனால் குடிநீர் வினியோக இடைவெளி மெல்ல மெல்ல அதிகரிக்க வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாகம் லீக் ஏற்படும் இடங்களை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய முன்வர வேண்டும்.
