/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் கசிவால் வீணாகும் குடிநீர்
/
குழாய் கசிவால் வீணாகும் குடிநீர்
ADDED : மே 14, 2024 12:28 AM

விருதுநகர்: விருதுநகர் கட்டையாபுரம் பகுதியில் குழாயில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யாததால் 20 நாள்களாக கசிவு வழியாக குடிநீர் வீணாகி வருகிறது.
விருதுநகர் - அருப்புக்கோட்டை பாலத்தின் கீழே கட்டையாபுரம் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் போது சேதமான குழாய் வழியாக குடிநீர் தொடர்ந்து கசிந்து வெளியேறுகிறது.
இந்நிலையில் காலை நேரத்தில் குடிநீர் வீணாகி ரோட்டில் ஆறாக வழிந்து ஓடுகிறது. இப்படி வீணாகும் குடிநீர் அருகே உள்ள பள்ளத்தில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிறது. இந்த கொசுக்கள் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலை கடந்த 20 நாள்களாக நீடித்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். எனவே குழாயை சீரமைத்து கசிவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

