/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பழுதடைந்த மோட்டாரால் 6 வார்டுகளுக்கு ஆறு மாதமாக குடிநீர் பற்றாக்குறை
/
பழுதடைந்த மோட்டாரால் 6 வார்டுகளுக்கு ஆறு மாதமாக குடிநீர் பற்றாக்குறை
பழுதடைந்த மோட்டாரால் 6 வார்டுகளுக்கு ஆறு மாதமாக குடிநீர் பற்றாக்குறை
பழுதடைந்த மோட்டாரால் 6 வார்டுகளுக்கு ஆறு மாதமாக குடிநீர் பற்றாக்குறை
ADDED : ஏப் 09, 2024 12:17 AM

சிவகாசி : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் மோட்டார் பழுதால் ஆறு வார்டுகளுக்கு, ஆறு மாதமாக குடிநீர் பற்றாக்குறையால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
திருத்தங்கல் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு வரை மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து மானுார் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி மூலமாக குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வார்டு 10, 11, 18, 19, 20, 21, ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் மோட்டார் 6 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தது. ஆனால் இதுநாள் வரையிலும் சரி செய்யப்படவில்லை. இதனால் ஆறு வாடுகளுக்கும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு உள்ளூர் போர்வெல் மூலமாக உப்பு தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீரின்றி திண்டாடுகின்றனர். வேற வழி இன்றி விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே உடனடியாக மோட்டாரை சரி செய்து குடிநீர்வினியோகம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

