/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிழற்குடை சேதத்தால் மழை வெயிலுக்கு பயணிகள் சிரமம்
/
நிழற்குடை சேதத்தால் மழை வெயிலுக்கு பயணிகள் சிரமம்
ADDED : மே 30, 2024 02:02 AM

நரிக்குடி: நரிக்குடி குறவைகுளம் நிழற்குடை சேதம் அடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை நிழற்குடை கட்டாததால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
நரிக்குடி குறவைகுள கிராமத்தினர் பல்வேறு தேவைகளுக்காக நரிக்குடி, காரியாபட்டி, திருப்புவனம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று வருவார். பஸ் பிடித்து வெளியூர்களுக்கு செல்ல 2 கி.மீ., துாரம் நடந்து மெயின் ரோட்டிற்கு வர வேண்டும். மழை, வெயிலுக்கு அங்குள்ள நிழற்குடையில் ஒதுங்கினர். நாளடைவில் நிழற்குடை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
மழை, வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாமல், அங்கிருந்து 1 கி.மீ., தூரம் உள்ள நாலுார் விலக்கிற்கு நடந்து செல்ல வேண்டும்.10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
அப்பகுதியில் உரிய நேரத்திற்கு மட்டுமே பஸ்கள் கிடைக்கும். தவறவிட்டால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது போன்ற சமயங்களில் ஒதுங்க இடமில்லாமல் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.