/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அந்த காலத்தில் படி படி என பள்ளிகளை திறந்தனர் தி.மு.க. அரசு குடி குடி என மதுபான கடைகளை திறக்கிறது
/
அந்த காலத்தில் படி படி என பள்ளிகளை திறந்தனர் தி.மு.க. அரசு குடி குடி என மதுபான கடைகளை திறக்கிறது
அந்த காலத்தில் படி படி என பள்ளிகளை திறந்தனர் தி.மு.க. அரசு குடி குடி என மதுபான கடைகளை திறக்கிறது
அந்த காலத்தில் படி படி என பள்ளிகளை திறந்தனர் தி.மு.க. அரசு குடி குடி என மதுபான கடைகளை திறக்கிறது
ADDED : ஏப் 14, 2024 03:54 AM

அருப்புக்கோட்டை: அந்தக் காலத்தில் படி, படி என படிக்க பள்ளிகளை திறந்தனர். ஆனால் தற்போது தி.மு.க., அரசு குடி குடி என மதுபான கடைகளை திறக்கிறது, என விருதுநகர் தொகுதி பா.ஜ.,வேட்பாளர் ராதிகா அருப்புக்கோட்டையில் நடந்த பிரசாரத்தில் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ராமலிங்க நகர், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டங்குடி, புலியூரான், ராமலிங்கமில் பகுதி ஆத்திப்பட்டி, நேரு மைதானம் உட்பட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்து பேசுகையில் தி.மு.க., வுடான காங்., கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என தெரியவில்லை. 3 ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் காஸ் விலை குறைக்கப்படும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சொன்னார்களே தவிர,எதையும் செய்யவில்லை.
அந்தக் காலத்தில் படி, படி என படிக்க பள்ளிகளை திறந்தனர்.ஆனால் இந்த காலத்தில் தி.மு.க., அரசு குடி குடி என மதுபான கடைகளை திறக்கிறது. செயல்படுகிற கட்சி என்றால் அது பா.ஜ., மட்டும் தான். தமிழ்நாட்டில் ஒரு எம்.பி., கூட இல்லாமல் பல்வேறு நல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்கி உள்ளனர். விருதுநகர் தொகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை எதிர்க்கட்சியினர் ஒரு கல்லை கையில் வைத்துக் கொண்டு குற்றம் சாட்டி வருகின்றனர்.
உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர செய்தவர் மோடி. இந்தியா, அனைத்து நாடுகளும் பிரதமராக மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என கூறி வருகின்றனர். இது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. 10 ஆண்டு காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் சிறப்பாக நாட்டுக்காக, மக்களின் நலனுக்காக, தேசத்திற்காக, பொருளாதாரத்திற்காக, வேலை வாய்ப்பிற்காக சிறப்பாக செயல்படுத்தி உலகமே போற்றும் வகையில் பிரதமர் மோடி வளர்ந்து நிற்கிறார், என பேசினார்.
* விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் செங்கப்படை, கட்ராம்பட்டி, சிவரக்கோட்டை சித்திரெட்டிபட்டி, தொட்டியபட்டி, அப்ப கரை பகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் ராதிகா பிரசாரம் செய்தார்.
சில இடங்களில் தெலுங்கில் பேசி ஓட்டு சேகரித்தார். அவர் பேசுகையில், ''தொகுதிக்கு தேவையான மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் என்னால் உறுதியாக வாங்கித் தர முடியும். என்னை எப்போது வேண்டுமானாலும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்'' என்றார்.

