/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சர்ச்களில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம்
/
சர்ச்களில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம்
ADDED : ஏப் 01, 2024 06:36 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சர்ச்களில் ஈஸ்டர் விழா கொண்டாட்டம் நடந்தது.
சர்ச்களில் மார்ச் 31 இரவு 11:00 மணி முதல் பாஸ்கா திருவிழிப்பு, திருஒளி, இறைவார்த்தை, ஞானஸ்தான வாழிபாடு, ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு கூட்டுத்திருப்பலி, மறையுரை நடந்தது.
விருதுநகர் புனித இன்னாசியார் சர்ச், பாண்டியன் நகர் புனித சவேரியார் சர்ச், நிறைவாழ்வு நகர் புனித ஜெபமாலை அன்னை சர்ச், ஆர்.ஆர்.நகர்., புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச், சாத்துார் இயேசுவின் திரு இருதய ஆண்டவர் சர்ச், ஒத்தையால் அற்புத குழந்தை இயேசு சர்ச், காரியப்பட்டி புனித அமல அன்னை சர்ச், அருப்புக்கோட்டை புனித சூசையப்பர் சர்ச், சிவகாசி புனித லுார்து அன்னை சர்ச், திருத்தங்கல் புனித அந்தோணியார் சர்ச், தும்முசின்னம்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச், கிளை சர்ச்சுகள், மீனம்பட்டி புனித அன்னை தெரேசா சர்ச், வடபட்டி புனித அருளானந்தர் சர்ச், சிவகாசி சாட்சியாபுரம் புனித வேளாங்கண்ணி சர்ச், உள்ளிட்டவற்றில் மதுரை புனித பிரிட்டோ பள்ளி உதவி தலைமையாசிரியர் மரிய அருள் செல்வம், பாதிரியார் அருள்ராயன், உதவி பாதிரியார் கரோலின் சிபு, பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் இமானுவேல் சதீஷ், விருதுநகர் எஸ்.எப்.எஸ்., பள்ளி முதல்வர் ஆரோக்கியம், பாதிரியார்கள் அந்தோணிசாமி, பீட்டர்ராய், உதவி பாதிரியார் அருள்தாஸ், பாதிரியார்கள் ராஜா, காந்தி, ஜான்மில்ட்டன், ஜோசப் அமலன், தாமஸ் எடிசன், ஜான் மார்ட்டின், பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், மரியதுரை, பால்ராஜ், சந்திரநேவிஸ், அற்புத சாமி ஆகியோர் தலைமையில் பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, ஈஸ்டர் உயிர்ப்பு, திருப்பலி, மறையுரை நடந்தது.

