ADDED : ஏப் 15, 2024 12:49 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ---மல்லி சுந்தரேஸ்வரி கல்வியில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் குழுவினர் நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், முதல்வர் மல்லப்பராஜா தலைமையில் மதுரை கீழடி அகழாய்வு அருங்காட்சியத்திற்கு கல்வி சுற்றுலா சென்றனர்.
அங்கு அருங்காட்சியக அலுவலர் சுதாகர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். பண்டைத் தமிழரின் கலை, பண்பாடு, நாகரிகம் குறித்த விளக்கம் தங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
