sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்வியாளர்  பேட்டி - விருதுநகர் 

/

கல்வியாளர்  பேட்டி - விருதுநகர் 

கல்வியாளர்  பேட்டி - விருதுநகர் 

கல்வியாளர்  பேட்டி - விருதுநகர் 


ADDED : பிப் 22, 2025 06:55 AM

Google News

ADDED : பிப் 22, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவு வளர்ச்சிக்கு உதவும்.

-- சுந்தரபாண்டியன், ஓய்வு கல்லுாரி முதல்வர், விருதுநகர்.

மூன்றாவது மொழி கற்பது எப்போதுமே அறிவு வளர்ச்சிக்கு உதவும். அதே நேரம் படிப்பை பாதிக்காத அளவு மொழி கற்பது இருக்க வேண்டும். காரணம் இன்றைய சூழலில் கட்டாயப்படுத்தும் போது அதை மாணவர்கள் முழுவீச்சில் கற்பது இல்லை. ஆனால் விருப்பமுள்ள மாணவர்களுக்கு தேவையாக உள்ளது. மூன்றாவது மொழியாக பிற மொழியை படிக்கும் போது நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். பயனுள்ளதாக இருக்கும். எதை புதிதாக தெரிந்து கொள்வதில் தப்பில்லை. ஆனால் அது நம் பிற பாடங்களை பாதிக்க கூடாது.

பிற மொழி அறிவு முக்கியம்

- முத்துகிருஷ்ணவேணி, பேராசிரியை, அருப்புக்கோட்டை.

பிற மொழி அறிவு என்பது முக்கியமான ஒன்று. இந்தியா முழுவதும் நாம் பயணிக்க வேண்டும் என்றால் குறைந்தது நமக்கு 15 மொழிகளின் அறிவு இருக்க வேண்டும். அதற்காக 15 மொழிகளையும் பள்ளியில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது இல்லை. நமக்கு ஹிந்தி படிக்க ஆசையாக இருந்தால் படித்துக் கொள்ளலாம். அதற்காக கட்டாய பாடம் என்பது மாணவர்களுக்கு படிப்பு சுமையை கூட்டும். ஆகவே விருப்பமாக படிக்கலாம். தமிழ் என்பது தாய் மொழி. ஆங்கிலம் என்பது உலகம் முழுவதும் பேசப்படும். இதற்கு மேல் மொழி அறிவு வேண்டுமென்றால் அது அவரவர் விருப்பமாக இருக்க வேண்டும்.

மும்மொழி கொள்கையைஎதிர்ப்பது நல்லதல்ல

- செல்வராஜ், கல்வியாளர்,, காரியாபட்டி.

மும்மொழி கல்வி கொள்கையை தமிழக அரசு கொண்டு வர தயங்க கூடாது. அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் மொழிகளை கற்றுக்கொண்டு கருத்து பரிமாற்றத்தை எந்த மாநிலத்திலும் எளிதாக பயன்படுத்த முடியும். மொழியை கற்றுக்கொள்வதினால் எந்த பிரச்னையும் ஏற்படப் போவதில்லை. மேலும் அறிவுத்திறமையை வளர்த்துக் கொள்ள உதவுமே தவிர, வேறு எந்த ஒரு தீய பழக்கத்தையும் ஏற்படுத்தாது. மும்மொழி கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு கல்வித்திட்டத்தில் அமல்படுத்த வேண்டும். யாருக்கு என்ன விருப்பம் இருக்கிறதோ அவர்கள் அந்தப் பாடத்திட்டத்தை தேர்வு செய்து பயன்பெற உந்துதலாக இருக்கும். இதில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது. மும்மொழி கொள்கைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமே தவிர எதிர்ப்பது நல்லதல்ல.

அனைவருக்கும் சம வாய்ப்பு

- மாரிக்கண்ணு, கல்வியாளர், சாத்துார்.

மெட்ரிக் சி.பி.எஸ், இ., பள்ளி மாணவர்கள் தற்போது மூன்று மொழிகளை கற்று வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழி கற்பிப்பதை ஏன் தடுக்க வேண்டும். இது அந்த மாணவர்களின் உரிமையை பறிக்கும் செயல். வேலை மற்றும் உயர்கல்வியில் சம வாய்ப்பு கோருவது போல அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மூன்றாவது மொழியாக படிக்க வசதி வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது கல்வியில் மட்டும் மறுக்கப்படுவதால் நீட், ஜே.இ.இ.போன்ற போட்டித் தேர்வுகளில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.புதிய கல்விக் கொள்கை திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும்.

ஏழை மாணவர்கள் ஏற்றம் பெறுவர்

-- ஜெயக்குமார் ஞானராஜ், ஓய்வு தலைமை ஆசிரியர், ஸ்ரீவில்லிபுத்துார்.

இத்திட்டத்தின் மூலம் கிராமப் பகுதி ஏழை மாணவர்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவார்கள். தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு பணி நிமித்தம் சென்று உள்ளவர்களின் குழந்தைகள் அந்தந்த மாநிலங்களில் தமிழ் கற்றுக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும். ஏழை மாணவர்கள் கூடுதலாக ஒரு மொழியை இலவசமாக கற்றுக் கொள்ள மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். துவக்க கல்வி நிலையிலேயே கூடுதலாக தாங்கள் விரும்பும் ஒரு மொழியை எளிதாக கற்றுக் கொள்வது அவர்களின் எதிர்காலத்திற்கு உபயோகமாக இருக்கும்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மேலோங்கும். இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டால் ஹிந்தி படித்த ஏராளமானோர் ஆசிரியர்களாக வாழ்வில் மேலும் உயர்வடைவார்கள்.






      Dinamalar
      Follow us